எய்ட்ஸ் நோயால் யாழ்ப்பாணத்தில் மூவர் பலி

Report Print Shalini in நோய்

இந்த வருடத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் வைத்தியர் தாரணி குருபரன் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் மாத்திரம் யாழ். மாவட்டத்தில் எய்ட்ஸ் (எச்.ஐ.வி) தொற்றுக்குள்ளான ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரே உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2014ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 39 பேருக்கு எய்ட்ஸ் தொற்று காணப்பட்டமை கண்டறியப்பட்டது.

இவர்களின் 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், எஞ்சியிருப்போர் அநுராதபுரம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.