பிரியாணி உண்டதால் பாதிக்கப்பட்ட 28 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்

Report Print Rusath in நோய்

ஏறாவூர் நகரில் திருமண வீடொன்றில் பரிமாறப்பட்ட உணவை உட்கொண்டவர்களில் 23 பேர் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சிலர் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய நிலையில் நேற்று இரவு வெளியேறியுள்ள நிலையில், 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 15 பேர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் பழீல் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் பள்ளியடி வீதியிலுள்ள திருமண வீடொன்றில் 24.11.2017 அன்று பரிமாறப்பட்ட கோழி இறைச்சி பிரியாணியை உட்கொண்டதை அடுத்து உடல் உபாதைக்குள்ளான 53 பேர் நேற்று ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.