தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையால் 80 பேர் பாதிப்பு

Report Print Shalini in நோய்

பொகவந்தலாவ - டின்சின் தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருபள்ளி திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதான உணவு ஒவ்வாமை காரணமாக 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாந்தி மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் தெரிவித்தார்.

தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தை உண்ட 80 பேர் பாதிக்கபட்டு இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் 15 பேர் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் மருந்து பெற்றுச் சென்றுள்ளதுடன் நான்கு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும், பொகவந்தலாவ தோட்ட வைத்தியசாலையில் 10 பேர் மருந்து பெற்றுச் சென்றுள்ளதோடு மேலும் 20 பேர் டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் மருந்து பெற்றுக் கொண்டு சென்றுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.