வடக்கில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in நோய்

வடக்கில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண முடிவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பாலியல் சார்ந்த நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் பிரியந்த பட்டகல தெரிவித்துள்ளார்.

சர்வதேச எயிட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் விழிப்புணர்வு பேரணி நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் 8 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது வடக்கில் 50க்கும் மேற்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். இவர்களில் 36 பேர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்கள் குறித்து ஆராயும் போது 2015 ஆம் ஆண்டு 239 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அது 2016 ஆம் ஆண்டு 249 ஆக அதிகரித்தது.

எயிட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பதற்கு இரண்டு பிரதான விடயங்கள் காரணங்களாக உள்ளன

.எயிட்ஸ் நோய் தொற்றி நோய் அடையாளங்கள் தென்பட சுமார் 4 ஆண்டு காலம் வரை செல்லும். இதனால், பரிசோதனை செய்வதில்லை.

மேலும் நோய் தொற்றிய பின்னர் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுவதால் அதனை மறைக்க முயற்படுகின்றனர்.

இவை காரணமாகவே நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், எயிட்ஸ் நோய் குறித்து மக்களுக்கு தொடர்ந்தும் தெளிவுபடுத்தி, நோய் சம்பந்தமாக நபர்களை பரிசோதனை செய்தல் போன்றவற்றை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக மருத்துவர் பிரியந்த பட்டகல மேலும் தெரிவித்துள்ளார்.