திருகோணமலையில் டெங்கு நோயினால் 4956 பேர் பாதிப்பு

Report Print Mubarak in நோய்
24Shares

திருகோணமலையில் டெங்கு நோய் மூலம் இவ்வருடத்தில் 4956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலையால் தற்போது டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட சுகாதார பணிமனை தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் 111 டெங்கு நோயாளிகள் மாவட்ட ரீதியாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது கடந்த செப்டம்பர் (68) மற்றும் ஒக்டோபர் (71) ஆகிய மாதங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது அதிகமாக காணப்படுகிறது.

எனவே நுளம்புகள் பெருகக் கூடிய இடங்களை கண்டுபிடித்து சுற்றுச் சூழலை சுத்தமாக பேணுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதேவேளை திருகோணமலை நகர எல்லையில் கடந்த டிசம்பர் மாதத்தில் 21 டெங்கு நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 22 டெங்கு நோயாளர்களும் நவம்பர் மாதத்தில் 17 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.