7 வயதுச் சிறுமியின் உயிரை பறித்த டெங்கு

Report Print Rusath in நோய்

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸுர்தீன் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமி, கடந்த மூன்று தினங்களாக டெங்குக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் தரம் 2 இல் கற்கும் முஹம்மத் இஸ்மாயில் பஸாத் ஐனி(7) என்ற சிறுமியே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதேவேளை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம்பெற்றுள்ள முதலாவது டெங்கு மரணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.