12 வயது மாணவன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

Report Print Rusath in நோய்

டெங்குக் காய்ச்சல் காரணமாக 12 வயதுடைய மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் - மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் 7ஆம் ஆண்டில் கல்வி கற்கும் என். எம். எம். முஆத் (வயது 12) என்ற மாணவனே டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ,மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.