முதல் 20 நாட்களில் 5ஆயிரம் டெங்கு நோயாளர்கள்: 4 பேர் பலி

Report Print Ajith Ajith in நோய்

வருடத்தின் முதல் 20 நாட்களில் டெங்கு நோயினால் 4 பேர் பலியாகியுள்ளதுடன், 4 ஆயிரத்து 924 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு 805 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 500 பேரும், யாழ்ப்பாணத்தில் 435 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 396 பேரும் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆயிரத்து 927 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.