இலங்கையை அச்சுறுத்தும் வாய்ப்புற்று நோய்: நாளொன்றுக்கு மூவர் மரணம்

Report Print Ajith Ajith in நோய்
107Shares

இலங்கையில் வாய்ப்புற்று நோய் காரணமாக நாளொன்றுக்கு மூன்று பேர் மரணிப்பதாக வாய்ப்புற்றுநோய் மற்றும் முகம் தொடர்பான விசேட வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அந்தச் சங்கத்தின் தலைவரான பற்சிகிச்சை நிபுணர் ஆனந்த ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

வருடமொன்றில் வாய்ப்புற்றுநோய் தாக்கத்துக்கு உள்ளான 2 ஆயிரத்து 500 புதிய நோயாளர்கள் பதிவாகின்றனர்.

இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இந்த நோய் தாக்கத்துக்கு அதிகமாக உட்படுகின்றனர் என்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.