வேகமாக பரவும் அம்மை நோய்! மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Shalini in நோய்

திருகோணமலை - கிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் வேகமாக பரவி வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.அஜீத் தெரிவித்துள்ளார்.

எனவே அம்மை நோய் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பொது பரிசோதகருக்கு உடன் அறிவிக்குமாறும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொற்று நோய்களிலிருந்து தம்மை பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இவ் விடயம் தொடர்பில் கிண்ணியா வாழ் பொது மக்களுக்கு மதஸ்தலங்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.