முதல் மூன்று மாதங்களில் 91 எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்கள் கண்டு பிடிப்பு

Report Print Kamel Kamel in நோய்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் எச்.ஐ.வீ நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட 91 பேர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பால் நோய் மற்றம் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு கட்டுப்பாட்டு பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் எச்.ஐ.வீ தொற்றுக்கு உள்ளான 75 பேர் கண்டு பிடிக்கப்பட்டிருந்தனர்.

அதன்படி இந்த ஆண்டில் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் டிலானி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களில் 39 பேர் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மத்தியில் அதிகளவில் எயிட்ஸ் நோய்த் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் இது குறித்து மக்களை தெளிவூட்ட வேண்டுமெனவும் டொக்டர் டிலானி ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தாயின் ஊடாக பிள்ளைக்கு எயிட்ஸ் நோய் பரவுவதனை இலங்கை கட்டுப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.