இலங்கையர்களை குறிவைக்கும் ஆபத்து! காரணம் இதுவே

Report Print Sujitha Sri in நோய்

இலங்கையர்களில் பெரும்பாலானோர் வெற்றிலை, புகையிலை போன்றவற்றுக்கு அடிமையாகியுள்ளதால் வாய் மற்றும் கழுத்து சார்ந்த புற்றுநோய்கள் இவர்களை குறிவைக்கும் ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார ஊக்குவிப்பு பணியத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பணியகத்தின் பிரதி பணிப்பாளர் சந்திக கஜநாயக்க இந்த விடயம் தொடர்பில் விளக்குகையில்,

வெற்றிலை, புகையிலை என்பவற்றின் பாவனை காரணமாக வாய் மற்றும் கழுத்து புற்று நோய்கள் தாக்குவதற்கான அபாயம் காணப்படுகிறது.

எனினும் ஆரம்பத்திலேயே புற்றுநோயை இணங்காண்பதால் அதனை குணப்படுத்தி விட முடியும். வாயில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற மச்சங்கள் காணப்படின் அது புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.

இவ்வாறான அறிகுறிகள் தென்படின் வைத்தியரை உடனடியாக அணுகுவது சிறந்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.