தொடர்ந்து உயிர்களை பலியெடுக்கும் கொரோனா! இலங்கையர்கள் கட்டாயம் அறிய வேண்டிய விடயங்கள்

Report Print Sujitha Sri in நோய்

கொரோனா வைரஸ் போன்ற தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்டிருக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் தற்போது முகமூடிகளை தேடி சிரமப்படுவதற்கு பதிலாக சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்டு செயற்பட முடிந்தால் மிகவும் பெறுமதியாக இருக்கும்.

முகமூடி அணியவேண்டும் என்பதை சுகாதார அமைச்சு இன்னும் அறிவிக்கவில்லை. இதனை சிலர் தமது நிலைப்பாடாக செய்கின்றனர்.

சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பரிந்துரைத்தால் மட்டுமே மக்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் அதிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ள இலங்கையர்கள் செய்ய வேண்டிய முக்கியமான சில விடயங்கள் தொடர்பில் இந்த காணொளியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.