கொரோனா வைரஸ் தொடர்பில் இந்திய பெண் விஞ்ஞானி வெளியிட்ட கருத்து

Report Print Tamilini in நோய்

உலகளாவிய ரீதியில் வேகமாக பரவிவரும் சீன வைரஸான கொரோனா குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை என இந்திய பெண் விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி பேராசிரியையும், இந்திய முன்னணி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ககன்தீப் காங், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்த நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்தில் நான்கு பேர், தாங்களாகவே குணமடைவார்கள். காய்ச்சல், இருமலுக்கு பரசிட்டமோலை (Paracetamol) தவிர வேறு மருந்து தேவைப்படாது.

ஐந்தாவது நபர் வேண்டுமானால், மருத்துவரைப் பார்க்க வேண்டும் அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும். மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

இந்த காய்ச்சல், குழந்தைகளை தீவிரமாக பாதிப்பது இல்லை. முதியவர்களைத்தான் பெரிதும் பாதிக்கிறது. நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களையும் பெரிதும் தாக்குகிறது. இப்போதைக்கு இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

பொதுமக்கள், தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் எழுந்தால், உடனே சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். பொதுமக்கள், கைகளை நன்றாக கழுவ வேண்டும். முக உறுப்புகளைத் தொடக் கூடாது என தெரிவித்துள்ளார்.


you may like this video