பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் ஒருவரின் அனுபவம்

Report Print Tamilini in நோய்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் ஒருவர் தனது அனுபவத்தை சமூக வலைத்தளம் ஊடாக பகிர்ந்துள்ளார்.

ஈஸ்ட்ஹாம் பகுதியை சேர்ந்த நௌஹாட் அபூசலி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது வெட்கப்பட வேண்டிய நோய் இல்லை, வெளிப்படையாக வைத்தியர்களிடம் சொல்லி சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.

எனக்கு ஆரம்பத்தில் சில அறிகுறிகள் தென்பட்டபோது குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை பெற்று மாத்திரைகளை பெற்றதாக குறிப்பிட்டார்.

எனினும் சில நாட்களில் உடல்நிலையில் ஏற்பட்ட காரணமாக அவசர பிரிவுடன் தொடர்பு கொண்டு எனது நிலையை வெளிப்படுத்தினேன். அவர்கள் சில படிமுறைகள் மூலம் எனது நிலையை பரிசோதித்த பின்னர் எந்தவித பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்டனர்.

சாதாரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் பரசிட்டமோல் மாத்திரைகளை எடுத்தேன். எனினும் சில மணி நேரங்களில் அது பயங்கரமான காய்ச்சலாக மாறியது. மீண்டும் அவசர பிரிவுடன் தொடர்பு கொண்டு நிலையை விளக்கினேன். அம்புலன்ஸ் மூலம் என்னை வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.