இலங்கையில் கொரோனா தொற்று எவ்வாறு உறுதி செய்யப்படுகின்றது?

Report Print Tamilini in நோய்

கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதுவரையில் உலகளவில் 212 நாடுகளில் கொரோனா தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36 இலட்சத்து 69 ஆயிரத்து 747 பேர் என்பதோடு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 169 பேர் ஆகும்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆகும்.

இதுவரையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகும்.

தொற்றுக்குள்ளானவர்களுள் அநேகமானோர் கடற்படை என சுகாதார அமைச்சும் இராணுவத் தளபதியும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் என அடையாளம் காணப்படுபவர்களுக்கு பீசீஆர் எனப்படும் பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவுகளை வைத்து தான் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகின்றது.

இந்த பீ.சீ.ஆர் எனப்படும் பரிசோதனை என்பது என்ன..?

எவ்வாறு பரிசோதனை செய்யப்படுகின்றது..?

அதன் படிமுறை எவ்வாறு இருக்கும்..?

என மிகத் துல்லியமாக விளங்கப்படுத்தியுள்ளார் கொழும்பு மருத்துவக் கல்லூரியின் 3ம் வருட மாணவனான சுஜன் சுகுமாரன்.