ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத்தில் அடுத்த ஐந்து வருட காலப் பகுதியில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யத் தீர்மானித்துள்ளோம் என இலங்கைக்கான சீனத் தூதுவர் Yi Xianliang கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை வர்த்தக வலயத் திறப்பு விழாவில் இன்று(07) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த முதலீட்டை சீனா மேற்கொள்ள உள்ளது எனத் தெரிவித்தார்.