2017ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்..? உலக வங்கி தகவல்

Report Print Vino in பொருளாதாரம்
81Shares

2017ஆம் ஆண்டில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும்..? என்பதை கணித்துள்ள உலக வங்கி, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டு உள்ளது.

வர்த்தக தேக்கம், அடக்கமான முதலீடுகள் மற்றும் உச்சபட்ச கொள்கை, நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் உலக பொருளாதாரத்துக்கு கடினமான ஒரு ஆண்டாகவே இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும், பல ஆண்டுகள் ஏமாற்றத்துக்குப்பின் இந்த ஆண்டு உறுதியான பொருளாதார வாய்ப்புகள் தென்படுவதாக அந்த அறிக்கையில் உலக வங்கியின் தலைவர் ஜிங் யாங் கிம் கூறியுள்ளார்.

இதன்மூலம் உலக பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments