ஜீ.எஸ்.பி பிளஸ் கிடைத்தால் ஐரோப்பா சந்தைக்கு இலங்கை ஏற்றுமதி - நிதி அமைச்சர்

Report Print Ajith Ajith in பொருளாதாரம்
62Shares

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைப்பதன் ஊடாக ஐரோப்பிய சந்தைக்கு இலங்கையின் உற்பத்திகளை அனுப்ப முடியும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அங்கு உரையாற்றியுள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அன்றாட வாழ்வில் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்துவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Comments