பொருளாதார சுதந்திரத்தில் இலங்கையும் சீனாவும் சமநிலையில்! சுவிட்சர்லாந்து முன்னிலையில்

Report Print Vethu Vethu in பொருளாதாரம்
34Shares

பொருளாதார சுதந்திரத்தில் சீனாவும் இலங்கையும் ஒரே இடத்தை பிடித்துள்ளதாக புதிய புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் Heritage அமைப்பினால் வருடாந்தம் வெளியிடப்படும் பொருளாதார சுதந்திர சுட்டெண்ணிற்கமைய (Index of Economic Freedom) இந்த விபரம் வெளியாகியுள்ளது.

கடந்த வருடத்தை விடவும் இலங்கை 19 இடம் பின் சென்றுள்ளமையினாலும், சீனா சில இடங்கள் முன் வந்துள்ளமையினால் இரண்டு நாடுகளும் ஒரே இடத்தை பிடித்துள்ளன. ரஷ்யா போன்ற பெரிய நாடுகளை விட இலங்கை முன்னிலை வகிக்கிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இலங்கை பொருளாதாரத்தில் 112வது இடத்தை பிடித்துள்ளது. எனினும் 2016ம் ஆண்டில் இலங்கை 93வது இடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய தரவுக்கு அமைய இலங்கை 57.1 என்ற புள்ளியை பெற்றுள்ளது.

கடந்த 6 வருடங்களினுள் இலங்கைக்கு கிடைத்த மிகக்குறைந்த புள்ளி இதுவாகும். கடந்த வருடம் இலங்கைக்கு 59.9 புள்ளிகள் கிடைத்துள்ளது.

இதில் 50 புள்ளிகளுக்கு குறைவான புள்ளிகளை பெறும் நாடுகள் பொருளாதார சுதந்திரத்தில் வீழ்ச்சியடைந்த நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 50 - 70 புள்ளிகளுக்குள் உள்ள நாடுகள் ஓரளவு பொருளாதார சுதந்திரமடைந்த நாடுகளாக பெயரிடப்படும். இலங்கையும் அந்த பட்டியலிலேயே இணைந்துள்ளது.

70 - 80 புள்ளிகளை பெற்ற நாடு அதிக பொருளாதார சுதந்திரமடைந்த நாடாக கணிப்பிடப்பட்டுள்ளது.

80 புள்ளிகளுக்கு அதிகம் பெற்ற நாடு முழுமையான பொருளாதார சுதந்திரமடைந்த நாடாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

இங்கு பொருளாதார சுதந்திரம் கொண்ட சிறந்த 5 நாடுகளுக்காக ஹொங்கொங், சிங்கப்பூர், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் பெயரிடப்பட்டுள்ளது.

180 நாடுகள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், ஈராக், சோமாலியா, சிரியா, யேமன் மற்றும் Liechtenstein ஆகிய நாடுகள் இணைக்கப்படவில்லை.

Comments