வெளிநாட்டில் பணியாற்றுபவர்களால் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!

Report Print Vethu Vethu in பொருளாதாரம்

வெளிநாட்டில் பணி புரிபவர்களால் இலங்கைக்கு கிடைத்த வருமானத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் டொலருக்கு எதிராக ரூபாயில் ஏற்பட்ட வீழ்ச்சியினால், வருமானத்தில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017ம் முதல் காலாண்டில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு 261.4 பில்லியன் ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

கடந்தாண்டில் இதே காலப்பகுதியில் 258.1 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது. நடப்பாண்டில் அது நூற்றுக்கு 1.3 வீத அதிகரிப்பாகும்.

எனினும் அதனை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது அது நூற்றுக்கு 3.3 வீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை 2017ஆம் ஆண்டும் மார்ச் மாதம் வெளிநாட்டில் உள்ள பணியாளர்களினால் அனுப்பப்படும் பணம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

97.3 மில்லியன் ரூபாயிலிருந்து 89.9 பில்லியன் ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2017 மே மாதம் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 1.8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வருடத்தின் முதல் காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் வருமானத்தில் ரூபாயின் பெறுமதியில் 11.3 வீதமாக அதிகரித்துள்ளது. டொலர் பெறுமதியில் 6.1 வீத அதிகரிப்பாகும்.

Comments