ஹம்பாந்தோட்டை துறைமுக ஆரம்ப கட்ட வருமானம் இன்னும் கிடைக்கவில்லை

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையின் மூலம் இன்னும் அரசாங்கத்திற்கு ஒரு சதமேனும் வருமானம் கிட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

2017 ஜூலையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் முன்னரே இலங்கைக்கு வருமானம் கிடைக்க வேண்டும்.

உடன்படிக்கையின்படி இலங்கை துறைமுக அதிகார சபை, சீன மேச்சன்ட் ஹோல்டிங் நிறுவனம் ஆகியன இணைந்து 606 மில்லியின் அமெரிக்க டொலர் நிதியீட்டில் திட்டத்தை முன்னெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் 50.7 என்ற வருமானப்பகிர்வு இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கிடைக்கும். சீன நிறுவனத்திற்கு 49.3 வீதம் கிடைக்கும்.

இந்தநிலையில் முதல் கட்ட வருமானப்பகிர்வு கிடைத்த பின்னர், அந்த வருமானப் பகிர்வு மீள்முதலீடு செய்யப்படும். அதில் துறைமுக அதிகாரசபை 69.55 வீதத்தையும் சீன நிறுவனம் 30.45 வீதத்தையும் மீண்டும்
முதலீடு செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers