அதிகரித்துச் செல்லும் பணவீக்கம்! வாழ்க்கைச் செலவு உயர்வினால் திண்டாட்டம்

Report Print Aasim in பொருளாதாரம்

அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் காரணமாக வாழ்க்கைச் செலவு உயர்ந்து செல்வதால் ஏழை மக்கள் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 7.9 வீதமாக இருந்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8.6 ஆக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வாழ்க்கைச் செலவும் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக நாட்டில் வாழும் ஏழை மக்கள் பெரும் திண்டாட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு தொடர்ந்தும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால் எதிர்வரும் மாதங்களில் இந்த நிலை இன்னும் மோசமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.