பால்மாவின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்

Report Print Kamel Kamel in பொருளாதாரம்

பால்மாவின் விலை உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவினால் உயர்த்த அனுமதிக்கப்பட வேண்டும் அல்லது பால்மாவிற்கான இறக்குமதி வரியை 15 வீதத்தினால் குறைக்க வேண்டுமென பால்மா நிறுவனங்கள், நிதி அமைச்சு, நுகர்வோர் விவகா அதிகார சபையிடம் கோரியுள்ளன.

உலக சந்தையில் பால் மாவின் விலை உயர்வடைந்துள்ளதாகவும், இதுவரையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு விதிக்கப்படாத பெறுமதி சேர் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இதனால், நிறுவனங்கள் பாரியளவில் நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.

தற்போது 400 கிராம் எடையுடைய பால்மா பக்கட்டின் விலை 325 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் எடையுடைய பால்மாவின் விலை 810 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.