மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் எச்சரிக்கை

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

எதிர்காலத்தில் இலங்கைக்கு எரிபொருளைத் தாங்கிவரும் கப்பல்கள் தாமதமடைந்தால், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என கனியவளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மாபியா என்பது இந்த நாட்டில் எப்போதும் இருப்பதொன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

தரம்குறைந்த எரிபொருள் இறக்குமதி, கப்பல்கள் வருவதற்கு தாமதம்,

சுத்திகரிப்பில் பிரச்சினை போன்ற காரணங்களால் தாமதங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், எரிபொருளை தாங்கிவரும் இரண்டு அல்லது மூன்று கப்பல்கள் தாமதமடைந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.