கடத்தல்காரர்களுக்கு சாதமான வெளிநாட்டு நாணயச் சட்டம்

Report Print Steephen Steephen in பொருளாதாரம்
29Shares

அந்நிய செலாவணி சட்டத்தை இரத்துச் செய்து விட்டு புதிதாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு நாணயச் சட்டம் கடத்தல் வியாபாரிகளுக்கு சாதமான சட்டம் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதானையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சட்டத்திற்கு அமைய பிணை முறிப்பத்திர மோசடி உட்பட நிதி மோசடிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய பலருக்கு எதிராக வழக்கு ஒன்றையும் தொடர முடியாது போகும். அவர்கள் தப்பிச் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

அந்நிய செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டத்திற்கு பதிலாக கடந்த 17 ஆம் திகதி வெளிநாட்டு நாணயச்சட்டத்தை கொண்டு வந்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன் கடந்த ஜூன் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் இருந்த சட்டத்தை இரத்துச் செய்து விட்டு 2017 வெளிநாட்டு நாணயச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டம் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போது எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்த எவரும் அக்கறை காட்டவில்லை எனவும் புபுது ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.