பல அமைச்சுக்கள் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றன

Report Print Kamel Kamel in பொருளாதாரம்

பல அமைச்சுக்கள் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதி நான்கு மாதங்களுக்கான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, அமைச்சுக்களுக்கு வழங்கப்படவில்லை என கொழும்பு வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியே இவ்வாறு அமைச்சுக்களுக்கு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சில அமைச்சுக்கள் கடும் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

அபிவிருத்தி திட்டங்களுக்காக சுமார் 8, 000 கோடி ரூபா நிதி அமைச்சுக்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும், சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு போன்றனவே அதிகளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.