குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நாளாந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

Report Print Kamel Kamel in பொருளாதாரம்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் நாளாந்த வருமானம் ஒன்றரை கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வருடாந்த வருமானம் 18 பில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு வழங்குதல் உள்ளிட்ட சேவைகளின் மூலம் இவ்வாறு வருமானம் ஈட்டப்படுகின்றது.

நாள்தோறும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் சுமார் 2,500 முதல் 3,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்குகின்றது.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,500 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள ஏழு மாடிக் கட்டடத்தில் இயங்கி வரும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், மாத வாடகையாக நான்கரை கோடி ரூபாவினை இலங்கை இராணுவத்திற்கு செலுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.