ஊவா மாகாணத்தில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிப்பு

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

ஊவா மாகாண சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊவா மாகாண நிதியமைச்சரும் முதலமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க வரவு செலவுத்திட்டத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஊவா மாகாணத்தின் அடுத்த வருடத்திற்கான வருமானம் 4 ஆயிரம் 300 மில்லியன் ரூபா எனவும் உத்தேச செலவுகள் 3 ஆயிரத்து 855 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் நடத்தப்படும் போட்டிப் பரீட்சையின்றி பட்டதாரிகளான பௌத்த பிக்குகள் அவர்கள் வசிக்கும் விகாரைகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன் ஊவா மாகாணத்தின் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான கொள்கைக்கு அமைய மாகாணத்தில் 5 ஆண்டுகள் கடமையாற்ற வேண்டும் என்ற விதிமுறை மூன்று வருடங்களாக குறைக்கப்படும்.

அதன் பின்னர் ஏற்படும் வெற்றிடங்களுக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.