அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்வரும் சனிக்கிழமை சீனா வசம்!

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

அம்பாந்தோட்டை துறைமுகம் எதிர்வரும் சனிக்கிழமை சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட வுள்ளதாக துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

சீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனமானது அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற்றுக்கொள்ளவதங்கான உடன்படிக்கை கடந்த ஜுலை மாதம்கைச்சாத்திடப்பட்டது.

இதற்காக 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை குறித்த சீன நிறுவனம் வழங்கஇணங்கியுள்ள நிலையில், அதில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்வரும்சனிக்கிழமை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஒரு மாதத்தின் பின்னர் 10 வீதமும் (100 மில்லியன் அமெரிக்க டொலர்)அடுத்து வரும் ஆறு மாதத்தில் எஞ்சியுள்ள தொகையையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர்மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதமான பகுதி, சீன மேர்ச்சன்ட் போர்ட்ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அங்கீகரிப்பதற்காக நாளைய தினம்விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.