அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்! 294 மில்லியன் டொலர் பிரதமரிடம் கையளிப்பு

Report Print Samy in பொருளாதாரம்

சீன - இலஙகை ஒன்றிணைந்த அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு அமைய அதன் செயற்பாட்டு நடவடிக்கைகள் இன்று (09) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன தூதுவரின் தலைமையில் இன்று (09) பாராளுமன்ற கட்டடத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் Hambantota International Port Group Pvt Ltd (HIPG), Hambantota International Port Services Company Pvt Ltd (HIPS) ஆகிய நிறுவனங்களிடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக இன்று (09) முதல் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவான தொகையில் இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 30% தொகையான 294 மில்லியன் அமெரிக்க டொலர்களை, சீன (China Merchants Port) நிறுவனம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தது.