விமானங்களில் எரிபொருள் தட்டுப்பாடு

Report Print Kamel Kamel in பொருளாதாரம்

விமானங்களிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைகளில் விமானங்களுக்காக விநியோகம் செய்யப்படும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் கப்பலொன்று உரிய நேரத்திற்கு வராத காரணத்தினால் அவசரமாக சுமார் ஐந்து கோடி ரூபா செலவழித்து எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளளது.

இதன்படி இந்திய எரிபொருள் நிறுவனமொன்றுக்கு சொந்தமான எரிபொருட்கள் இவ்வாறு அவசரமாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவசரமாக கொள்வனவு செய்வதனால் வழமையாக செலுத்தப்படுவதனை விடவும் மேலதிமாக செலுத்தி பெற்றுக்கொள்ள நேரிட்டுள்ளது.

மீளவும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இவ்வாறு அவசரமாக எரிபொருள் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அது சர்வதேச அளவில் நாட்டின் நன்மதிப்பை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.