ரஸ்யாவுக்கான தேயிலையில் இருந்த “வண்டு” இலங்கை வண்டு அல்ல

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதியை கட்டுப்படுத்த ரஸ்யா எடுத்த தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட, பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க ரஸ்யாவுக்கு செல்லவுள்ளார்.

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலையில் வண்டு ஒன்று இருந்தமையை அடுத்து ரஸ்யா தமது கட்டுப்பாட்டு தீர்மானத்தை அறிவித்திருந்தது.

எனினும் இது ஒரு பிரத்தியேக சம்பவம் என்று இலங்கையின் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

எனவே இது இலங்கையின் தேயிலை உற்பத்தி தரத்தில் மதிப்புக் குறைப்பை ஏற்படுத்தாது என்றும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி தேயிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் வண்டு அரிசி போன்ற பொருட்களில் இருந்தாலும் கூட அது தேயிலையுடன் இருந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தநிலையில் அந்த வண்டு இலங்கையில் உள்ள வண்டு என்பதை விட தேயிலையை ஏற்றிச்சென்ற கப்பலில் இருந்த வண்டாக இருந்திருக்கலாம் என்றும் இலங்கை தேயிலை சபை கூறியுள்ளது.