தேசிய மற்றும் வெளிநாட்டு அரிசியை கலந்து நுகர்வோருக்கு விற்பனை

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

தேசிய மற்றும் வெளிநாட்டு அரிசியை கலந்து நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வியாபாரம் ஒன்று நடைபெற்று வருவதாக மரதகாமுல அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மிகவும் தரம் குறைந்த இந்த அரிசி சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அரிசியை கொள்வனவு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு ரஞ்சித் நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.