சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்

Report Print Nivetha in பொருளாதாரம்

கடந்த ஆண்டு சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் அதிக இலாபம் கிடைத்துள்ளதாக விவசாய திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சிறு ஏற்றுமதி பயிர் விற்பனையின் மூலம் 40 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாசனை திரவிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட சுற்றாடல் பசுமை கிராம வேலைத்திட்டம் பலன் தந்திருப்பதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தில் ஆயிரம் விவசாயிகள் வரை இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்கீழ் விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை பெறுவதற்கு தலா மூவாயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.