நாட்டின் நிதிச் சந்தையில் சிக்கல்

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் மற்றும் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் அண்மையில் பிரதமர் ஆற்றிய உரையாற்றியிருந்தார்.

இதன் காரணமாக நாட்டின் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமையை சீர்ப்படுத்த இலங்கை மத்திய வங்கி தலையிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.

சில நிதி நிறுவனங்களில் வைப்பு நிதிகள் காலம் கடந்தும் திரும்ப பெறப்படாமல் உள்ளன. சில நிதி நிறுவனங்களிடம் சென்று பணத்தை கேட்டாலும் செலுத்த முடியவில்லை.

நிதி பாதுகாப்புக்கு வழிக்காட்டும் நடவடிக்கைகளை நிதி முறைமை தொடர்பான அதிகாரமிக்க நிறுவனம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.