இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ள இலங்கை!

Report Print Samy in பொருளாதாரம்

வளர்ச்சி அடைந்து வரும் ஜனநாயக நாடுகள வரிசையில் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி இலங்கை முன்னேறியுள்ளது.

உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள வளர்ச்சி பட்டியலில் இத்தகவலி வெளியிடப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட உலகப் பொருளாதார அமைப்பின் மாநாடு டாவோஸில் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட பொருளாதார வளர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் உலக நாடுகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து பட்டியல் இடப்பட்டுள்ளன.

மேம்பட்ட பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் முதல் வகை. ஓரளவு பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகள் இரண்டாவது வகை.

முதல் பிரிவில் நோர்வே, அமெரிக்கா உள்பட 27 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில், இலங்கை, பங்களாதேஸ் உள்ளிட்ட 74 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தரவரிசையில், மொத்தமுள்ள 74 நாடுகளில் இலங்கை 40வது இடத்தையும், இந்தியா 66-வது இடத்தையும் பிடித்துள்ளன

மற்றும் அயல்நாடுகளான நேபாளம் 22வது இடத்தையும், பங்களாதேஸ் 34வது இடத்தையும், பாகிஸ்தான் 47வது இடத்தையும் பிடித்துள்ளன.

மக்களின் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைச் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு, எதிர்கால சந்ததியைக் கடனில் தள்ளாத பொருளாதாரச் சூழ்நிலை எனப் பல அம்சங்களை வைத்து இந்தத் தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.