இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருடம்

Report Print Steephen Steephen in பொருளாதாரம்

இலங்கையின் வரலாற்றில் மிகப் பெரிய முதலீடு அடுத்த வருட ஆரம்பத்தில் கிடைக்க உள்ளதாகவும், கொழும்பு துறைமுக நகருக்காக 28 ஆயிரம் கோடி ரூபா முதலீடு கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

துறைமுக நகரத்தை நிர்மாணித்து முடிக்கும் முன்னர் இந்த முதலீடு கிடைக்க உள்ளது. இதில் ஆயிரம் மில்லினில் அமெரிக்க டொலர் 60 மாடிகளை கொண்ட மூன்று கோபுரங்களை நிர்மாணிக்கவும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் துறைமுக நகரின் வீதி நிர்மாணிப்பு பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.

குறிப்பாக காலிமுகத்திடலில் இருந்து கரையோர வீதியுடன் இணைக்கும் சுரங்க பாதைக்கான முழுமையான முதலீட்டை சீன நிறுவனம் செய்ய உள்ளது. இந்த வீதி நிர்மாணிக்கப்பட்ட பின்னர் காலிமுகத் திடலின் பரப்பளவு மேலும் 30 மீற்றர்களாக அதிகரிக்கும்.

ஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் புதிய களனி பாலத்தில் இருந்து துறைமுக நகரம் வரையான மேம்பாலத்திற்கான அளவீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடலை நிரப்பி நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டத்தின் ஊடாக 80 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.