நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய பொருளாதாரக் கொள்கை அடுத்த வாரமளவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நாட்டுக்குத் தேவையான உடனடிப் பொருளாதார முகாமைத்துவ மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் இதன்போது கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான குறுகிய, மத்திய கால, நீண்டகால பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டதாக இந்த புதிய பொருளாதாரக் கொள்கை அமையப் பெற்றிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையிலான தேசிய பொருளாதார சபையின் கலந்துரையாடலில் மேற்குறித்த விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் பொருளாதார நலன்கள் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்காக தேசிய பொருளாதார சபை நிறுவப்பட்டது.
தற்போதைக்கு இந்தச் சபை நேற்றைய அமர்வுடன் சேர்த்து எட்டு அமர்வுகளை நடத்தியுள்ளது.