ஜனவரியில் பணவீக்கம் வீழ்ச்சி

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தொகை மதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 டிசம்பரின் 7.3 சதவீதத்திலிருந்து 2018 ஜனவரியில் 5.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வீழ்ச்சிக்கு, 2017 ஜனவரியில் நிலவிய உயர்ந்த தளமும் அதேபோன்று 2018 ஜனவரியில் உணவு விலைகளில் ஏற்பட்ட மாதாந்த வீழ்ச்சியும் காரணங்களாக அமைந்தன என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்க இங்கே அழுத்தவும்