பொருளாதாரம் குறித்த சிந்தித்து செயற்திட்டங்களை வகுக்கவும்! ஜனாதிபதி

Report Print Aasim in பொருளாதாரம்

அபிவிருத்திச் செயற்திட்டங்களை வகுக்கும் ​போது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வௌியிடும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், ஒரு நாடு என்ற வகையில் பொருளாதார விடயங்களை சிறப்பான முறையில் முகாமைத்துவம் செய்தால் மாத்திரமே அபிவிருத்தியை அடையலாம்.

எனவே அபிவிருத்திக்கான உத்தேச மதிப்பீடுகள் மற்றும் செயற்திட்டங்களை வகுக்கும் போது நாட்டின் பொருளாதார நிலையையும் கருத்திற்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.