வருமானம் கொழிக்கும் கொழும்புத் துறைமுகம்

Report Print Aasim in பொருளாதாரம்

கொழும்புத் துறைமுகம் கடந்த ஆண்டில் பாரிய வருமானத்தை ஈட்டிக் கொண்டுள்ளதாக அதன் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் கொழும்புத் துறைமுகம் 13.2 பில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதற்கு முந்திய 2016ம் ஆண்டு பெற்றுக் கொண்ட 10 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடும்போது 2017ம் ஆண்டின் வருமானம் பாரியளவில் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் துறைமுக அதிகார சபையின் ஒட்டுமொத்த செலவு 30,190 மில்லியன் ரூபாவாகும். கடந்த 2016ம் ஆண்டில் 33005 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

அந்த வகையில் கடந்த ஆண்டு துறைமுக அதிகார சபையின் செலவும் குறைந்து வருமானமும் அதிகரித்துள்ளது.