பாரிய வீழ்ச்சியை கண்டுள்ள ரூபாவின் பெறுமதி

Report Print Murali Murali in பொருளாதாரம்

கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 1.18 ரூபாவினால்வீழ்ச்சி கண்டுள்ளதுடன், இது 0.76 வீதமாக பதிவாகியுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள அரசில் உறுதியற்ற தன்மையினால் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி 9ம் திகதி 156.19 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி நேற்றைய தினம் 157.37 ரூபாவாக வீழ்ச்சி கண்டது. இது முன்னொருபோதும் இல்லாதளவு வீழ்ச்சியாகும்.

கண்டி வன்முறையின் பின்னர் அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 56 சதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த ஆண்டில் மாத்திரம், அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 2.22 ரூபாவினால் குறைவடைந்துள்ளது. இது 1.43 வீத வீழ்ச்சியாகும்.