திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை அமைக்க நடவடிக்கை

Report Print Aasim in பொருளாதாரம்

இலங்கையில் திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள் மூன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

மின்சக்தி மற்றும் புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, ருவன்வெல்லையில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் ​போது இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் இலங்கையில் மின் பற்றாக்குறை அல்லது அது தொடர்பான எந்வொரு சவாலுக்கும் முகம் கொடுப்பதற்கான நிலை ஏற்படப் ​போவதில்லை.

எனினும் எதிர்காலத்தில் அதிகரிக்கும் மின் தேவையை கருத்திற் கொண்டு இலங்கையில் திரவ எரிவாயு (Liquefied natural gas) மின்னுற்பத்தி நிலையங்கள் மூன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தலா 500 மெகாவொட் உற்பத்தித்திறன் கொண்ட குறித்த மின்னுற்பத்தி நிலையங்கள் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவற்றுக்கான திரவமாக்கப்பட்ட எரிவாயுவை தடையின்றி பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தமொன்று தென்கொரியாவுடன் செய்து கொள்ளப்படவுள்ளது என்றும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Latest Offers