டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி: காரணம் இதுதான்

Report Print Murali Murali in பொருளாதாரம்

அமெரிக்க டொலரின் பெறுமதி மிக அதிக அளவில் உயர்ந்து செல்கின்ற தன்மை உலக நாடுகளின் மத்தியில் சாதாரணமாக இடம்பெறும் ஒரு விடயம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காது என்று வடமேல் மாகாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளிலும் அமெரிக்க டொலருக்கு அமைவாக தமது நாடுகளின் நாணயம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இலங்கையிலும் அவ்வாறே இடம்பெற்றுள்ளது.

உலகில் நிலவும் பொருளாதார நிலையே இதற்கு காரணம். இதற்கு அரசியல் சாயம் பூசுவதோ அல்லது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவதையோ தவிர்த்து கொள்ளுமாறு கலாநிதி அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை பொருளாதாரம் டொலர் பெறுமதிக்கமைவாக ரூபாவின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அரசியல் மற்றும் பொருளாதார என்ற அடிப்படையில் நோக்கவேண்டும்.

இது தொடர்பில் அரசியில் மேடையில் பெரும் விமர்சனங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பொருளாதார ஆய்வாளர் என்ற ரீதியில் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

எத்தகைய நாட்டினதும் நாணய பெறுமதியை தீர்மானிப்பது முக்கிய 4 விடயங்கள் தாக்கத்தினாலேயே ஆகும்.

இதில் ஒன்று நாடொன்றில் கைத்தொழில் தன்மையாகும். அதாவது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கொண்டதாகும். நாட்டில் உள்ள முதலீடு அரசாங்கத்தின் கொள்கை மற்றும் மக்களின் மனிதநேய விடயங்கள் கூறும் விடயங்களாகும்.

பொது மக்களின் மனித நேய விடயங்களினால் நாணய விகிதம் பாரியளவில் அதிகரிக்ககூடும் அல்லது குறைவடையக்கூடும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் பொது மக்களின் கோரிக்கையை விநியோகிப்பதற்கான விரிவான தன்மை.

உதாரணமாக டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது அந்த டொலருக்கு கூடுதலான கோரிக்கை இடம் பெறக்கூடும். இந்த 4 விடயங்களின் அடிப்படையில் தான் எந்தவொரு நாட்டினதும் வெளிநாட்டு நாயண பெறுமதி தீர்மானிக்கப்படுகின்றது.

இலங்கையின் ரூபாவிற்கு அமைவாக அமெரிக்காவின் டொலர், அமெரிக்காவில் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 4 விடயங்களுள் அமெரிக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள அரச கொள்கையும் ஒன்றாகும்.

இந்த அரச கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் அந்நாட்டின் பாரிய வளர்ச்சியை எடுத்துக்காட்டியுள்ளது. இந்த அதிகரிப்புடன் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளது.

வளர்ச்சியை நோக்கும் பொழுது 2016 ஆண்டில் முதலாவது காலாண்டு பகுதியில் 0.5 சதவீதமாகும். 2017 இரண்டாவது காலாண்டு பகுதியில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் முதல் காலாண்டு பகுதியில் இது 2.9 சதவீதம் ஆகும். இந்த சதவீதத்தை கவனத்தில்கொள்ளும் போது 2016 ஆம் ஆண்டுக்கமைவாக 2017 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் 540 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி என்பது அடிப்படை வசதி அபிவிருத்தி என்பதாகும். இந்த விடயங்களுடன் அமெரிக்காவின் வர்த்தக துறையில் பாரிய ஏற்றதாழ்வு ஏற்பட்டது. அதனால் வட்டி வீதம் அதிகரித்தது.

ஏனைய நாடுகளுக்கமைவாக ஏனைய விடயங்களிலான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு அமெரிக்க டொலர்கள் மீண்டும் அமெரிக்காவையே சென்றடைந்தது.

இதற்கு உதாரணம் தான் ஐரோப்பிய நாடு மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தமத பொருளாதார வளர்ச்சி ஓரளவுக்கு சிக்கலுக்கு உள்ளானதன் காரணமாக வட்டி வீதம் குறைக்கப்பட்டதினால் ஐரோப்பியா மற்றும் ஜப்பான் நாடுகளிலுள்ள டொலர் தொகை மீளப்பெறும் நிலை ஆரம்பித்தது.

அமெரிக்க டொலர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றது. இவர்களுக்கு அதன் போது ஆகக்கூடுதலான வட்டி வித வருமானத்தை பெறமுடிந்தது. இதுவே உலகத்திலுள்ள பொதுவான நிலையாகும்.

இந்த விடயங்களை நோக்கும் போது வெறுமனே நாட்டு வட்டத்திற்குள் இருக்காது அதாவது குளத்திலுள்ள தவளையாக செயற்படாது வெளியில் சென்று பரந்த நிலை கண்னோட்டத்தில் இதனை நோக்கவேண்டும்.

இதில் உலகின் உண்மை நிலையை கண்டறிய முடியும். பொதுவாக நாடுகளை எடுத்து கொண்டால் இலங்கையில் அமெரிக்க டொலர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சமகால அரசாங்கம் பதவி பொறுப்பை ஏற்ற பொழுது அதன் பெருமதி 131.45 சதமாக இருந்தது.

இன்று 157 , 159 ரூபாவாக உள்ளது. இந்த புள்ளி விபரங்களை நோக்கும் போது ஏனைய நாடுகளின் அதாவது பாகிஸ்தானில் 2014 ஏப்ரல் மாதம் தொடக்கம் 2018 ஏப்ரல் மாதம் வரை அந்நாட்டிகன் நாயணம் 20.16 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையிலும் பார்க்க அங்கு வீழ்ச்சி இடம் பெற்றது. ஜப்பான் யென் ஒன்று 6.23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. யூரோ ஒன்றின் 16 சதவீதத்தினாலும் இந்திய நாணயம் 2015 ஆம் தொடக்கம் 2018 க்கும் உட்பட்ட காலப்பகுதியில் 8.3 சதவீதத்தினாலும் வீச்சியடைந்துள்ளது.

அதனால் டொலரின் பெறுமதி அதிகரிப்பு அனைத்து உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers