நிதி அமைச்சின் அடுத்த நடவடிக்கை! உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி

Report Print Shalini in பொருளாதாரம்

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்துக்கு விசேட இறக்குமதி தீர்வை வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 40 ரூபாவை இறக்குமதி தீர்வை வரியாக அறவிடப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி உருளைக்கிழக்கு இறக்குமதியின் போது கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெரியவெங்காயம் கிலோ ஒன்றுக்கான தீர்வை வரி 39 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்த வரிஅதிகரிப்பு அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Latest Offers