இலங்கைக்கு கிடைக்கவுள்ள 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!

Report Print S.P. Thas S.P. Thas in பொருளாதாரம்

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 11 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடையும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மற்றும் கையிருப்புக்கள் தொடர்பாக அண்மையில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அது தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பானது தற்போது 9.1 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. எனினும் எதிர்வரும் ஜூன் நடுப்பகுதி அளவில் அது 11 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடையும்.

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 8.2 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததாகவும் அரசாங்கத்தின் காத்திரமான செயற்பாடுகளினால் அது இந்தளவு முன்னேற்றத்தை காட்டுகிறது.

2016-,2019 வருடங்களுக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க தீர்மானித்துள்ள கடன் தொகையின் அடுத்த பகுதி எதிர்வரும் ஜூன் மாத முற்பகுதியில் கிடைக்கவுள்ளது. இதற்கிணங்க அத்தொகை 250 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

இதேவேளை 2018 ஜூன் மாதத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்கப்பட்டதில் கிடைக்கவேண்டிய இறுதி தவணை நிதியான 558 மில்லியன் அமெரிக்க டொலர் ஜூன் மாதத்தின் 2வது வார பகுதியில் கிடைக்கும்.

இதற்கிணங்க 2018 ஜூன் மாத நடுப்பகுதியளவில் 1.0 பில்லியன் அமெரிக்கன் டொலரை இணைந்த கடன் சலுகையாக பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.