சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி

Report Print Murali Murali in பொருளாதாரம்

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 1.12 அமெரிக்க டொலரினால் குறைந்துள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலையில் ஏற்பட்டிருந்த அதிகரிப்பு காரணமாக அண்மையில் இலங்யைில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.