நேர்மையான விதத்தில் உதவுகின்றோம்! இலங்கை அபிவிருத்தியில் சீனாவின் பங்கு

Report Print S.P. Thas S.P. Thas in பொருளாதாரம்

இலங்கை தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் தனது சுய அபிவிருத்தி திறனை அதிகரிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்குகின்றது என சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சன்யிங் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சீனாவின் பங்கு குறித்து பேசிய அவர்,

இலங்கையும் சீனாவும் மூலோபாய ஒத்துழைப்பு சகாக்கள். எப்போதும் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் நேர்மையான உதவிகளை வழங்கியுள்ளோம்.

இலங்கை தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் தனது சுய அபிவிருத்தி திறனை அதிகரிப்பதற்கும் சீனா தன்னால் முடிந்தளவு உதவிகளை வழங்குகின்றது. இதனை இலங்கை அரசாங்கமும் மக்களும் பாராட்டியுள்ளனர்.

இலங்கையுடான நட்புறவு ஒத்துழைப்பு உறவுகளிற்கு சீனா முக்கியத்துவம் அளிக்கின்றது இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைக்க விரும்புகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்துள்ளமை குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளில் ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளமை குறித்து தமக்கும் தெரியாது என சீனா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.