ரூபாவின் பெறுமதியின் வீழ்ச்சியினால் பால்மா விலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

Report Print Nivetha in பொருளாதாரம்

பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கிலோ கிராம் பால்மா விலையை 70 ரூபாவால் அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் உலக சந்தையில் 3 ஆயிரத்து 250 டொலராக காணப்பட்ட ஒரு மெற்றிக் தொன் பால்மாவின் விலை தற்போது 3 ஆயிரத்து 450 டொலராக அதிகரித்துள்ளது.

இதனால் பால்மாவை இறக்குமதி செய்வதில் பால்மா உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு இன்னலகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளதால் பால்மா நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.